காதல் குளியல் செய்கிறேன்
உன் முன்னே நின்று
உன் கண் மடை திறந்து பெய்யும் மழையில்
நான் காதல்
குளியல்
செய்கிறேன்
மழையா இது வெறும் மழையா
உள்ளத்தைக் குளிர்வித்து உயிரைக் குளிர்வித்து
ஜில்லென ஜில்லெனப் பெய்யுது இந்த மழை
மெல்லென
மெல்லென நடக்குது இன்பக் குளியல்
என் ஆசை
தீர்க்கும் இன்பக் குளியல்
சூரியக்
குளியல், எண்ணெய்க் குளியல், தண்ணீர்க் குளியல்
எல்லாக்
குளியலும் காதல் குளியலின் முன் தோற்கும்
என் காதல்
வெல்லும் ஆஹா காதல், காதல்
குளியல்! குளியல்! குளியல்!
இனி எல்லாம் விடியல், விடியல், விடியல்!
காதல் என்றும் தீர்வதில்லை
காதல் மழையும் நிற்பதில்லை
குளியல் தொடரும், தொடரும், தொடரும்,
ஆஆஆஆ ஆ லா லா லா
ஆஹாஹா ஹா ஹா
....ஆஹாஹா ஹா ஹா
-மோகன் சஞ்சீவன்