Sunday, 23 September 2012

செவ்வாய் கிரகம் சிவப்பாகத் தோன்றக் காரணம்தான் என்ன?


இப்போது சிவப்பாகத் தெரியும் செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் கறுப்பாகக்  கரி நிறத்தில் இருந்திருக்கலாம்.   இப்போது அது சிவப்பாகதோன்றுவதற்கும் முன்பு கரி போல இருந்ததற்கும் ஒரே காரணம் தான். இப்போதைய சிவப்பு அதன் மேற்பரப்பில் ஏராளமாக உள்ள இரும்பு ஆக்சைடு தான். அது முன்பு ஆக்சிகரணம்  அடையமால் இரும்பு ரூபத்தில் இருந்த போது கருப்பாக இருந்திருக்கும். இதுதான் சுருக்கமான விளக்கம்.  இங்கு சொன்ன இரும்பு ஆக்சைடுதான்  ரத்தம் மற்றும் துரு சிவப்பு நிறமாக இருக்கக் காரணம்

இரும்பு எப்படி அங்கே வந்தது என்று பார்த்தால் அது பற்றிய விளக்கம் பெற 4.5 பில்லியன் வருடங்கள் பின் செல்ல வேண்டும்.  இறந்து போன நட்சத்திரங்களில் நட்சத்திரத்தின் கடைசி கட்டங்களில் உருவான இரும்பு விண்வெளியில் வாயு மற்றும் தூசுகளில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு புவி ஈர்ப்பு விசையால் வாயுக்களும் தூசுக்களும் உள்வாங்கி கிரகங்களாக உருவெடுத்த போது அவற்றுக்குள் போய் முடங்கியது.  பூமியைப் பொறுத்த வரை இந்த இரும்பு பூமிக்கடியில் அதன் மத்திய பாகத்தில் போய் நிலை கொண்டது. ஆனால் குறைந்த செவ்வாய் கிரகம் குறைந்த புவி ஈர்ப்பு கொண்டதால் இரும்பு மேல் பரப்பில் வெகுவாக தங்கி விட்டது. இருந்தாலும் சொற்பமாக அந்த கிரகத்திலும் அதனடியில் உள்ள மத்திய பாகத்திலும் இரும்பு உண்டு . மேற்பரப்பில் உள்ள இரும்பு காரணமாக மேற்பரப்பு கருப்பாகவும் காணப்படுகிறது. ஆனால் வெகுவான இரும்பு ஆக்ஸிகரணம் அடைந்து இரும்பு ஆக்சைடு ஆக மாறி விட்டதால் மேற்பரப்பு சிவப்பாகவும் பூமியில் இருந்து பார்க்கும்போது செவ்வாய் சிவப்பாகவும் தோன்றுகிறது.

சரி இரும்பு ஆக்சைடு ஆக ஆக்சிஜன் வேண்டுமே அது எங்கிருந்து வந்தது? செவ்வாயின் புராதன காலத்தில் ஏற்பட்ட மலை புயலின் போது மழை தண்ணீரில் இருந்து பிரிந்த ஆக்சிஜன் மூலமாக ஆக்சைடு ஆனதா, இல்லை செவ்வாய் கிரக மண்டலத்தில் உள்ள கரிய மில வாயு மற்றும் இதர மூலக் கூறுகளை சூரிய ஒளி உடைத்து அதன் மூலம் வெளியான ஹைட்ரஜன் பராக்சைடு, மற்றும் ஓசான் மூலம் ஆக்சிகரனமடைந்து இரும்பு ஆக்சைடு ஆனதா அல்லது    2009  இல் டென்மார்க் விஞ்ஞானிகள் தெரிவித்த படி செவ்வாய் கிரகத்து தூசு புயல் கொஞ்சம் கொஞ்சமாக மேற்பரப்பில் உள்ள  குவாட்ஸ் படிகங்களை நொறுக்கி வெளிபடுத்திய ஆக்சிஜன் மூலமாக இரும்பை அதன் ஆக்சைடு வடிவத்திற்கு மாற்றியதா?

சரியான விளக்கம் இதுவரை இல்லை என்றாலும் அங்குள்ள இரும்பு ஆக்சைடு தான்  செவ்வாய் சிவப்பாகத் தோன்றக் காரணம் என்பது தெளிவு. இந்த இரும்பு ஆக்சைடு நீல மற்றும் பச்சை நிறங்களை கிரகித்துக் கொண்டு சிகப்பு ஒளியை வெளி விடுவதால் சிவப்பாக தெரிகிறது. எகிப்தியர்கள் அதை சிவப்பான ஒன்று பொருள் படும் ஹேர் தெஷர் என்றும் சீன வானியல் வல்லுனர்கள் இதை நெருப்பு நட்ச்சத்திரம் என்றும் அழைத்தார்கள்
















No comments:

Post a Comment